தமிழ்நாடு அரசு போக்கவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.
சத்தியமங்கலம் ஆசனூர் வனச்சாலையில் பேருந்து வந்து கொணடிருந்தபோது, பேருந்தில் பயணித்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மதுபோதையில் பயணிகளிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பயணிகள் நடத்துநரிடம் தெரிவித்துள்ளனர்.