ஈரோட்டில் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து காவிலி பாளையத்துக்கு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு நகர்ப்புற பேருந்து நேற்று புறப்பட்டது.
இந்தப் பேருந்தின் நடத்துனரான ரமேஷ், பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி கொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் பயணித்த பயணி கனகராஜ் டிக்கெட் வழங்கும் நடத்துனர் ரமேஷிடம் தகராறில் ஈடுபட்டார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட அரியப்பம்பாளையம் பெரியூர் சந்திப்பில் பேருந்து நிறுத்திவிட்டு பயணியிடம் ரமேஷ் டிக்கெட் கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கனகராஜ் நடத்துனரை தாக்கியுள்ளார்.