பவானிசாகர் தனித் தொகுதிக்கு அதிமுக சார்பில் ஏ. பண்ணாரி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளர் இல்லாத தொகுதியாக பவானிசாகர் தொகுதி உள்ளது. தேர்தலுக்கு 4 நாள்களே இருப்பதால், வேட்பாளர்கள் இங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஆதி திராவிடர் காலனியில் தெலுங்கு பேசும் மக்களிடம் வேட்பாளர் பண்ணாரி தெலுங்கில் பேசி வாக்கு சேரித்தார். இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் முன்செல்ல, பின்தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று ஏ.பண்ணாரியும் அவரது ஆதரவாளர்களும் வாக்கு சேரித்தனர்.