ஈரோடு, ரங்கம்பாளயத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான ராமலிங்கம். இவரது மகன்களான தீபக் (15), கிஷாந்த் (6) ஆகிய இருவரும் கடந்த இரு நாள்களாக முன் தனது தாத்தா, பாட்டி உதவியுடன் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையை சந்தித்து புகாரளித்தனர்.
அதில், தனது தந்தை ராமலிங்கம் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, தனது தாய் ரஞ்சிதா மற்றும் இரண்டாவது மனைவி இந்துமதி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், தங்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
சிறுவர்களுக்கு தந்த கொடுமைகள்
சிறுவர்களான எங்களை படிக்க விடாமல், வீட்டு வேலைகளை செய்ய வைத்தும், குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளை செய்து முடிக்காவிட்டால் கழிவறையை சுத்தம் செய்யும் கிருமி நாசினியை குடிக்க வைத்தும், சாப்பிட்டதுடன் மிளகாய் பொடி கலந்து சாப்பிடக் கொடுத்ததாகவும் , கழிவறையில் தூங்க வைத்தும், தங்களின் ஆண் உறுப்பின் மீது மிளகாய் பொடி தூவியும் சித்ரவதை செய்வதாகவும் சிறுவர்கள் குற்றஞ்சாட்டினர்.
நரபலி கொடுக்கப் போவதாக மிரட்டல்
மேலும், தங்கள் தாய் ரஞ்சிதா சக்தியாகவும், தாயின் தோழி தனலட்சுமி சிவனாகவும் கூறி, தங்களை நரபலி கொடுக்கப்போவதாகவும் மிரட்டி வந்துள்ளனர்.
இதனால், பயந்துபோன தாங்கள் வீட்டிலுருந்து வெளியேறி தங்களது தாத்தா, பாட்டி உதவியுடன் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறிய தீபக், தனது தாய் ரஞ்சிதா, தாயின் தோழி தனலட்சுமியை திருமணம் செய்யும் வீடியோவையும் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நான்கு குற்றவாளிகளை தீவிரமாகத் தேடிவரும் காவல் துறையினர்
இந்நிலையில், ஏப்ரல். 13 அன்று ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் இவ்வழக்கில் தொடர்புடையவர்களான சசி என்கிற தனலட்சுமி, ரஞ்சிதா, இந்துமதி, சிறுவர்களின் தந்தை ராமலிங்கம் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகள் மீது வழக்குப்பதிந்த காவலர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் மூன்று தனிப்படைகள் கொண்ட குழு, தொடர்ந்து இரண்டாவது நாளாக தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், இது குறித்து குழந்தைகள் நல அலுவலர்கள் கொண்ட குழு, சிறுவர்களின் தாத்தா வசிக்கும் புளியம்பட்டிக்கு விரைந்து சென்று, உடனடியாக சிறுவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை இன்று (ஏப். 15) சமர்ப்பித்திருக்கிறது.
இதையும் படிங்க: 'விருதுநகர் பட்டாசு ஆலையில் தொடர் வெடி விபத்து: நான்கு பேர் படுகாயம்'