ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொங்கு மண்டபத்தில் நடந்த நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் பவானிசாகர் எம்எல்ஏ எஸ். ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ”10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியாக பொதிகை கல்வி தொலைக்காட்சி, யூடியூப் சேனல் ஆகியவற்றின் வழியாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வரும் மாணவர்கள் தேர்வெழுத வசதியாக இ-பாஸ் முறை உள்ளது. மேலும் மாணவர் தங்களது அடையாள அட்டையைக் காட்டினாலே போதும். அதைக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் செல்லலாம்.