கரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தேர்வு நடத்தப்பட்ட 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் 10ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.
கரோனா தாக்கம் இன்னும் குறையாமல் தொடர்ந்து நீடித்து நோய்ப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், 2020 - 2021ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு அவர்களது கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் முழுவதுமாக கட்டச் சொல்லி வற்புறுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
கல்விக் கட்டணம் முழுமையாக கட்டச் சொன்ன தனியார் பள்ளி முற்றுகை இந்த நிலையில் ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களின் முழு கல்விக் கட்டணத்தை செலுத்தக்கோரி நிர்பந்திப்பதாக மாணவ - மாணவிகளின் பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோரின் போராட்டத்தை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையும் படிங்க:இ-பாஸ் முறை இருந்தால் எவரையும் கண்காணிக்க முடியும் - முதலமைச்சர் பழனிசாமி