தமிழ்நாட்டில் பிரசித்திப் பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கோயிலில் 15 நாள்கள் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி குண்டம் விழாவில் பூசாரி மட்டும் குண்டம் இறங்கினார்.
குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கோயிலில் வைக்கப்பட்ட தற்காலிகமான ஆறு உண்டியல்கள், நிரந்தர 20 உண்டியல்கள் என 26 உண்டியல்கள் இணை ஆணையாளர் சபர்மதி தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன.