நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள ஆறு உறுப்பினர்களில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் தலா மூன்று இடங்களைப் பெற்றனர்.
இதனால் கவுன்சிலர்கள் சமநிலையில் இருப்பதால் தலைவர் தேர்தலில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் தலைவரை தேர்ந்தெடுக்க ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற இருந்த தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.