தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர் திருவிழாவையொட்டி பாரம்பரிய நடனமாடி கொண்டாடிய படுகர் மக்கள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்கள் தேர் திருவிழாவினை பாரம்பரிய நடனமாடி கொண்டாடினர்.

பாரம்பரிய நடனமாடி கொண்டாடிய படுகர் இன மக்கள்
பாரம்பரிய நடனமாடி கொண்டாடிய படுகர் இன மக்கள்

By

Published : Feb 6, 2023, 12:24 PM IST

பாரம்பரிய நடனமாடி கொண்டாடிய படுகர் இன மக்கள்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் கோட்டாடை, ஒசட்டி ஆகிய மலை கிராமங்களில் ஆண்டுதோறும் தை மாதம் ஜெடேருத்ரசாமி கோயில் தேர் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி ஒசட்டி மலை கிராமத்தில் உள்ள ஜெடேருத்ரசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேர் கோயிலை சுற்றி வலம் வந்தது.

இந்த விழாவில் மலை கிராம மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்துள்ள தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர் மீது வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து கோயில் வளாகத்தில் மலை கிராம மக்களின் பாரம்பரிய நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறுவர், சிறுமியர் மற்றும் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நடமான படுகர் நடனமாடி மகிழ்ச்சியுடன் விழாவை கொண்டாடினர். இந்த விழாவில் ஆசனூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:திருவள்ளுவருக்கு கோயில்..! ஊர்வலமாக சென்று மக்கள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details