உலகத்தை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றால், 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்றினால் இதுவரை மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் மோடி பொதுமக்களை தங்களது சுயக் கட்டுப்பாடுடன் வீடுகளுக்குள் இருந்து ஊரடங்கைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு முறையாகப் பின்பற்றப்பட்டது. இதன்மூலம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காய்கறி மார்கெட், ஜவுளி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.