ஈரோடு: திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலம் பவானிசாகர் அணையின் மூலம் பாசன வசதிபெறுகின்றது. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பது வழக்கம்.
இந்த ஆண்டு பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்குப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 95.89 அடியாகவும், நீர் இருப்பு 25.6 டிஎம்சி ஆகவும் உள்ளது. இந்நிலையில் ஓரிரு நாள்களில் நீர் திறப்பு குறித்த அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.