தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு - பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டதால் உழவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Opening of water for irrigation from Bhavani Sagar Dam
Opening of water for irrigation from Bhavani Sagar Dam

By

Published : Apr 21, 2021, 12:08 PM IST

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆகவும் உள்ளது. பவானிசாகர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இரண்டாம் போக கடலை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதுவரை நான்கு சுற்றுகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்தாம் சுற்றுக்கு 10 நாள் இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று (ஏப். 21) இறுதிச்சுற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஆண்டு இருமுறை தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆண்டு முழுவதும் நெல், கடலை சாகுபடி செய்து உழவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளனர்.

பவானிசாகர் அணை

கடந்த ஆண்டு இதே நாளில் 85 அடி நீர்மட்டம் இருந்தது. தற்போது 90 அடியாக நீடிப்பது நீர் மேலாண்மையின் சிறப்பாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 90.28 அடியாகவும், நீர் இருப்பு 21.7 டிஎம்சியாகவும், நீர்வரத்து 246 கனஅடியாகவும் உள்ளது. மேலும், அணையிலிருந்து 1700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதையும் படிங்க: பாம்புக்கடியால் உயிருக்குப் போராடிய குழந்தைகளைக் காத்த அரசு மருத்துவர்கள்

ABOUT THE AUTHOR

...view details