காவிரி நதிக்குப் புத்துயிரூட்டுவதற்காக ‘காவிரி கூக்குரல்’ (Cauvery Calling) என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தில் தமிழ்நாடு, கர்நாடக மாநில அரசுகள், விவசாயிகள் ஆகியோரின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக, தலைக் காவிரியான கர்நாடக மாநிலம் குடகு மலை முதல் திருவாரூர்வரை இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
Cauvery Calling: காவிரிக்காகக் கூக்குரலிடும் பன்னீர் மகன்... ஜக்கியுடன் கைகோர்த்த ஓபிஆர்! - காவிரி கூக்குரலில் ரவீந்திரநாத்
ஈரோடு: காவிரி மீட்பு பயணத்தில் (Cauvery Calling) ஜக்கி வாசுதேவுடன் அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், நடிகர் சரத்குமார் ஆகியோர் இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டனர்.

அதன்படி கடந்த 3ஆம் தேதி தலைக் காவிரியில் இருந்து திரும்பிய இக்காவிரி கூக்குரல் இயக்க பயணம் மைசூரு, பெங்களூர் வழியாக நேற்று ஈரோடு வந்தடைந்தது. இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய இந்த காவிரி மீட்பு பயணத்தில் ஜக்கி வாசுதேவுடன் அதிமுகவின் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், நடிகர் சரத்குமார் ஆகியோரும் இணைந்துகொண்டு ஈரோட்டில் இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய அதிமுகவின் தேனி மக்களவை உறுப்பினர் ரவிந்திரநாத், “காவிரியைக் காப்பாற்றுவதற்காகக் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 2 கோடி மரக்கன்றுகளை நட்டு கரையைப் பலப்படுத்த இருசக்கர வாகன பேரணியை ஜக்கி வாசுதேவ் நடத்தி வருகிறார். இதில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். இந்த இருசக்கர பயணமானது பல்வேறு மாவட்டங்களைக் கடந்து சென்னையில் முடிவடைகிறது.