ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பகுதி பாசனத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத அடையாளம் சுற்றிக்கை தொடர்பாக எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலருக்கு சுற்றிக்கை அனுப்பிவிட்டார். இது தான் ஒட்டுமொத்த குழப்பத்துக்கும் முக்கிய காரணம்.
’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை பின்பற்றும் அமைச்சர்..!
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் திறந்து வைத்தார்.
பள்ளிக் குழந்தைகள் மத அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அண்ணாவின் கொள்கையை நான் பின்பிற்றி வருகிறேன். எனவே பத்திரிகைகள் இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என கேட்டுகொண்டார். இதனைத் தொடர்ந்து மேலும் அவர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பள்ளிகள், வீடுகள் சேதமடைந்துள்ளது.
இதனை சரிசெய்வதற்கான ஆய்வுகூட்டம் நேற்று நடைபெற்றது. அவைகள் சரிசெய்யும் வரை தற்காலிகமாக வீடுகளில் வகுப்புகள் நடத்தபட்டு வருகிறது என்றார்.