ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்காலுக்கு முதல்போக பாசனத்துக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோா் தண்ணீரை திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுப்பட்டுவருகின்றன. தடுப்பணைப்புகளில் இணைப்பு சாலை தேவைப்படும் எனில் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து முடிவு செய்வர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பு உள்ளன. தஞ்சை சிறப்பு மண்டலமாகவும், தென்மாவட்டத்திற்கு தேவையான தண்ணீர் திறப்பு இருப்பதாலும் தமிழ்நாட்டில் விவசாயம் சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே உணவு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” என்றார்.