ஈரோடு:வேலப்பம்பாளையத்தில் வேதபாடசாலை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி கல்வெட்டினை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் மநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "ஜார்கண்ட் மாநில மக்கள் அணுகுமுறை அருமையாக உள்ளது 3 மாதங்களில் 24 மாவட்டங்களில் உள்ள மக்களை சந்தித்து உள்ளேன்.
8 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தரைவழி போக்குவரத்து பயணம் செய்துள்ளேன். ஜார்கண்ட் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் விரைவில் முன்னேற்றம் அடையும் என்றார். ஒரே நாடு ஓரே தேர்தல் காலத்தின் கட்டாயம் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும்.
நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் பொழுது பஞ்சாயத்து தேர்தல் வரை அனைத்தும் ஒன்றாக நடைபெற வேண்டும் அப்போதுதான் பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும். நாடு தேவையில்லாத தடைகளை நீக்க முடியும் அடிக்கடி தேர்தல் என்பது நாட்டிற்கு கேடு அதிகார பங்கீடு என்பது தேர்தலின் மூலம் வருவதால் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடந்து முடிந்திட வேண்டும்.