தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டின் முக்கிய வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பு!

ஈரோடு: சுல்தான் பேட்டை பகுதியிலிருந்து ஒருவர் கரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர்.

ஈரோட்டில் மேலும் ஒருவர் கொரோனோ அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி  ஈரோடு செய்திகள்  ஈரோடு கரோனா அறிகுறி  one more persone admitted in erode hospital corona syndromes
ஈரோட்டின் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளிப்பு

By

Published : Mar 25, 2020, 9:30 AM IST

தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்திருந்த இருவருக்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுவதோடு அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் தங்கியிருந்த சுல்தான் பேட்டை மற்றும் கொல்லம் பாளையம் பகுதிகள் மூடப்பட்டு அங்கு 164 குடும்பங்களைச் சேர்ந்த 694 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுல்தான் பேட்டை மஜீத் வீதியைச் சேர்ந்த அப்துல் காதர்(45) என்பவர் கரோனா அறிகுறியுடன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோட்டின் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளிப்பு

அவரை பரிசோதித்து வரும் மருத்துவர்கள் அவருக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்து வருகின்றனர். கரோனா வைரஸ் தாக்குல் எதிரொலியாக மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட மணிக்கூண்டு, சுல்தான் பேட்டை, கொல்லம்பாளையம் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா காரணமாக ஒருவர் சிகிச்சை, 78 பேர் தனிமைப்படுத்தல் - சுகாதாரத்துறை

ABOUT THE AUTHOR

...view details