தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடையில் திருடுபோன ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருள்கள்! - Erode theft news

ஈரோடு: பாரதி வீதியிலுள்ள யுபிஎஸ் சிஸ்டம் கடையில் கணினி, கைப்பேசி உள்ளிட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடு போனதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கடையில் திருடுபோன ஒரு லட்சம் மதிப்பிலான மின்னணு பொருள்கள்
கடையில் திருடுபோன ஒரு லட்சம் மதிப்பிலான மின்னணு பொருள்கள்

By

Published : Apr 20, 2021, 1:17 AM IST

ஈரோடு மாவட்டம், பாரதி வீதியில் உள்ளது சுப்ரீம் யுபிஎஸ் பவர் சிஸ்டம். இதன் உரிமையாளர் அசோக் (38) கடந்த சனிக்கிழமை (ஏப். 17) இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று (ஏப். 19) காலை கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள்

பின்னர், உள்ளே சென்று அவர் பார்த்தபோது கணினி, கைப்பேசி, யுபிஎஸ் உபகரணங்கள் உள்ளிட்ட மின்னணு பொருள்கள் திருடு போனது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தார்.

திருடு போன பொருள்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என அவர் தெரிவித்தார். இதுகுறித்து ஈரோடு மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஒலி, ஒளி அமைப்பு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நெல்லை ஆட்சியரிடம் மனு!'

ABOUT THE AUTHOR

...view details