தமிழ்நாடு

tamil nadu

ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் கரோனா நிதியாக வழங்கப்படும்- அமைச்சர்

By

Published : Apr 8, 2020, 9:50 AM IST

ஈரோடு: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் கரோனா நிதியாக வழங்கப்படும்
ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் கரோனா நிதியாக வழங்கப்படும்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர் தாலுக்காவில் உள்ள கடத்தூர், ஆண்டிபாளையம், கூடக்கரை உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் நடைபெற்றுவரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் கரோனா நிதியாக வழங்கப்படும்- அமைச்சர்

அப்போது, கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளமான ரூ.70 கோடியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

ஊரடங்கின்போது மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக செயல் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

மாணவர்கள் வீட்டிலிருந்தே யூட்யூப் மூலமாக பாடங்களை படிக்கும் முறை அமல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு முதலமைச்சர் அறிவிப்பின்படி பள்ளிகள் செயல்படத்தொடங்கும் “ என்றார்.

இதையும் படிங்க:கரோனா வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய துப்புரவு பணியாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details