ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் அம்பலவாணன். இவர் பல்வேறு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார். இதை அறிந்துகொண்ட திண்டல் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் தான் கோவையில் சுற்றுலா அழைத்துச் செல்லும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி 79 லட்சம் மோசடி: ஒருவர் கைது! - 79 lakhs
ஈரோடு: போலியான டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி 40 பேரிடம் 79 லட்சம் ரூபாயை மோசடி செய்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை நம்பி அம்பலவாணன் தன்னுடைய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் என 40 பேரை வெளிநாடு அழைத்துச் செல்வதற்காக நந்தகுமாரிடம் 79 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் சுற்றுலா அழைத்துச் செல்லாமல் நந்தகுமார் காலம் தாழ்த்தி வந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்பலவாணன் இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், முதல்கட்டமாக ஜமால் என்பவரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நந்தகுமார், கோவையைச் சேர்ந்த நிஜிஷ் சேவியர் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.