ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தர்மலிங்கம் என்பவர் நகைக் கடை நடத்திவருகிறார். இவரின் கடைக்குக் கடந்த 21ஆம் தேதி மதியம் மூன்று பெண்கள் சென்றனர்.
அவர்கள் கடையில் தங்க நகை வாங்குவது போல் பல்வேறு நகைகளின் விலை கேட்டுள்ளனர். கடையில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் நகைகளை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த பெண் நகை பெட்டியிலிருந்த தங்க சங்கிலியைத் திருடி கையில் வைத்துக்கொண்டார்.
பின்னர் மூன்று பெண்களும் சிறிது நேரம் கழித்துத் திருடி கையில் வைத்திருந்த சங்கிலி எடுத்துக் கொண்டு எந்த நகைகளும் வாங்காமல் கடையிலிருந்து திரும்பிச் சென்றனர்.
நகை வாங்குவது போல் நடித்து ஒன்றரை பவுன் செயின் திருட்டு இதையடுத்து கடை உரிமையாளர் தர்மலிங்கம் நகைகளைச் சரி பார்த்தபோது அதிலிருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி திருடு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மூன்று பெண்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே புளியம்பட்டி கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.