தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'3 மாதங்களாக முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை' - ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் விட்ட மூதாட்டி! - old age penstion

ஈரோடு: ஆதரவற்ற நிலையில் இருக்கும் மூதாட்டி ஒருவர், தனக்கு கடந்த மூன்று மாதங்களாக முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும், தான் உயிர் பிழைக்க அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கூறியது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

erode district news  ஈரோடு மாவட்டச் செய்திகள்  ஆதரவற்ற மூதாட்டி  old age penstion  old woman tears for three month old age pension
மூன்று மாதங்களாக முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை...ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் விட்ட மூதாட்டி

By

Published : Aug 10, 2020, 6:49 PM IST

ஈரோடு சங்கு நகர் பகுதியைச் சேர்ந்த ஆயிஷா சுல்தானா (62), யாரும் ஆதரவற்ற நிலையில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் இன்று (ஆகஸ்ட் 10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது கண்ணீர் மல்க பேசிய ஆயிஷா சுல்தானா, கடந்த மூன்று மாதங்களாக முதியோர் உதவித்தொகை தனக்கு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.

தான் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் அவர் வேதனையோடு கூறியது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. இதைப் பார்த்த சிலர் மனிதநேயத்தோடு மூதாட்டிக்கு பண உதவி செய்தனர்.

இதையும் படிங்க:’பழ வியாபாரியிடம் லஞ்சம் வாங்கவில்லை’ - விளக்கமளிக்கும் காவல்துறை

ABOUT THE AUTHOR

...view details