தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமையல் செய்த போது சேலை தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சோகம் - police

ஈரோடு அருகே சமையல் செய்த போது சேலையில் தீ பற்றிய, விபத்தில் பெண் ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சமையல் செய்த போது சேலை தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சோகம்
சமையல் செய்த போது சேலை தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சோகம்

By

Published : Jan 7, 2023, 7:03 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முருகன்புதூர் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் மனைவி சுப்புலட்சுமி(73). இவர்களுக்கு குணசேகரன்(50), சசிகுமார்(45) என்ற இரு மகன்கள் உள்ளனர். நஞ்சப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனைவியை பிரிந்து சென்ற பிறகு சுப்புலட்சுமி மகன் குணசேகரனுடன் வசித்து வந்தார்.

குணசேகரன் கடந்த சில ஆண்டுகளாக நடக்க முடியாத நிலையில் இருந்து வந்ததால், சுப்புலட்சுமியே நாள்தோறும் சமையல் செய்து வந்தார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் சுப்புலட்சுமி சமையல் செய்து கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக குக்கர் வெடித்து உள்ளது.

குக்கர் வெடித்த பின்னர் சிறுது நேரத்தில் மீண்டும் சமையல் செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட தீ, சுப்புலட்சுமியின் புடவையில் பட்டு, பாலியஸ்டர் புடவை என்பதால் தீ மளமளவென பரவியதாக கூறப்படுகிறது. பின்னர் சுப்புலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குணசேகரன் நடக்க முடியாத நிலையிலும் தவழ்ந்து சென்று தாயை காப்பாற்ற முயன்றுள்ளார்.

இதற்குள் கூச்சல் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் இருந்தவர்கள் வந்து சுப்புலட்சுமியை காப்பாற்ற முயன்றனர், ஆனால் அதற்குள் தீ முழுவதும் பரவியதால் அவரை காப்பாற்ற முடியாத நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சுப்புலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கடனுக்கு மதுபாட்டில் தராததால் டாஸ்மார்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

ABOUT THE AUTHOR

...view details