ஈரோடு திருநகர் காலனியைச் சேர்ந்தவர் மைதீன்கான் (66). கூலித்தொழிலாளியான இவருக்கு ஈசாக் என்ற மகனும் ஃபாத்திமா என்ற மகளும் உள்ளனர். கடுமையான சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்ட இவரை, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு அரசு மருத்துமனையில் உறவினர்கள் அனுமதித்தனர்.
நோயுற்ற முதியவரை தவிக்க விட்டுச் சென்ற உறவுகள்! - etvbharat
ஈரோடு: அரசு மருத்துவமனையில் அனுமதித்தபின் உறவினர்கள் விட்டுச் சென்றதால், நோயுற்ற முதியவர் சிகிச்சை பெறாமல் மருத்துவமனை வளாகத்தில் தவித்து வருகிறார்.
இதன்பின், அவரை அங்கேயே விட்டு அவரது உறவினர்கள் சென்று விட்டதாக தெரிகிறது. நோயாளியுடன் உறவினர்கள் யாரும் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு சிகிச்சையளிக்காமல், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையின் வெளியே படுக்க வைத்துள்ளது.
வீட்டின் முகவரியை சரியாகச்சொல்ல தெரியாததாலும், அழைத்துச்செல்ல உறவினர்கள் யாரும் இல்லாததாலும் மருத்துவமனை வளாகத்தில் கடந்த இரு தினங்களாக தவித்துவருகிறார். பகலில் ஈக்கள் மொய்க்கவும் இரவில் கொசுக்கள் கடியிலும் உறங்கி வரும் இவருக்கு மருத்துவமனைக்கு வரும் சிலர் உணவளித்து வருகின்றனர்.