ஈரோட்டில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது முதியவர் உயிரிழப்பு! - ஈரோட்டில் கரோனோ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது முதியவர் உயிரிழப்பு!
12:01 April 11
ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் இன்று மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.
உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு, தமிழ்நாட்டில் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றால், இதுவரை தமிழகத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைப் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர், கடந்த 8 ஆம் தேதி மூச்சு திணறலால் மருத்துவமனையில் சாதாரண வார்ட்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். திடீரென அதிகமாக மூச்சு திணறல் ஏற்பட்டதால், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள கரோனா வைரஸ் தொற்றுச் சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்ட்டில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், அவரின் ரத்தம், சளி உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோனை முடிவுகள் வந்தப் பின்னரே அவருக்குக் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தாரா அல்லது இல்லையா என்பது குறித்து தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கிய சேலம் ஆணையர்!