தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குடற்புழு நோயால் யானை மரணம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குடற்புழு நோயால் பாதிக்கப்பட்டு பெண் யானை ஒன்று உயிரிழந்தது.

பெண்யானை
பெண்யானை

By

Published : Jan 29, 2022, 12:02 AM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளை கண்காணிப்பதற்காக வனத்துறையினர் ரோந்துப்பணி மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி நேன்று(ஜன.28) பவானிசாகர் பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள காராச்சிக்கொரை வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் யானை இறந்து கிடந்ததை கண்டனர். இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் வனப் பகுதியில் இறந்து கிடந்த யானையை கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறாய்வு செய்ததில் இறந்தது 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை எனவும், குடற்புழு நோயால் யானை இறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இறுதிக் கட்டத்தை எட்டிய கோடநாடு வழக்கு?

ABOUT THE AUTHOR

...view details