தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் குறைதீர் கூட்டத்தில் ”செல்போனில் மூழ்கிய அதிகாரிகள்”; விவசாயிகள் அதிர்ச்சி! - விவசாயிகளின் கோரிக்கை

ஈரோடு : வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை கேட்காமல் செல்போனில் மூழ்கியபடி இருந்த அதிகாரிகள், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

செல்ஃபோன் பயன்படுத்தும் அதிகாரிகள்

By

Published : Sep 27, 2019, 5:49 PM IST


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மாவட்ட ஆட்சியர் சென்றுவிட்ட நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தொடர்ந்து கூட்டத்தை நடத்தினார்.

அப்போது, பெரும்பாலான அரசு அதிகாரிகள், விவசாயிகளின் கோரிக்கையினை செவிகொடுத்து கேட்காமல் செல்போன் பயன்படுத்திகொண்டு அதில் மூழ்கியது விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள் வேளாண் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை என குற்றம்சாட்டினர்.

வேளாண் குறைதீர் கூட்டத்தில் செல்ஃபோன் பயன்படுத்தும் அதிகாரிகள்

மேலும், பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் தற்போது பெய்து வரும் மழையினை பயன்படுத்தி சாயகழிவுகளை திறந்து விடுகின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க :இழப்பீடுத் தொகை வழங்காமல் பெண்ணை இழுத்தடித்த அலுவலர்கள்...

ABOUT THE AUTHOR

...view details