தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலையை விட்டு போங்கள் - மிரட்டும் அலுவலர்கள்! - Officers threatening to quit job

ஈரோடு: நிர்ணயம் செய்யப்பட்ட இலக்குகளை விட அதிக இலக்குகளை நிர்ணயித்து, இயலவில்லை என்றால் வேலையை விட்டு  போங்கள் என அலுவலர்கள் மிரட்டுவதாகக் கூறி அஞ்சல்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அஞ்சல்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Aug 22, 2019, 7:54 AM IST

ஈரோடு மாவட்டத்தில் 3 தலைமை அஞ்சல் அலுவலகம்,65 துணை அலுவலகம், 253 கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 800 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், ரூரல் போஸ்டல் லைப் இன்சூரன்ஸ், சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் அதிகப்படியான இலக்குகளை நிர்ணயிப்பதாகவும், இதனை செய்ய மறுத்தால் வேலையை விட்டு சென்றுவிடுங்கள் என அலுவலர்கள் மிரட்டுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வேலையை விட்டு போங்கள் என அலுவலர்கள் மிரட்டுவதாக கூறி அஞ்சல்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், உதவி கோட்ட, உட்கோட்ட அலுவலர்களின் இந்த தொடர்ச்சியாக நெருக்கடி தருவதை கைவிடக் கோரியும், 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட தலைமை அலுவலகத்தில்100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details