தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட வரிவசூல் அலுவலர் கைது - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: புதிய குடிநீர் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட வரிவசூல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

வரிவசூல் அலுவலர் கைது
வரிவசூல் அலுவலர் கைது

By

Published : Jan 6, 2021, 7:03 AM IST

ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் பகுதியில் உள்ள மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் வரி வசூல் அலுவலராக செல்லத்துரை என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் புதிய குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதாக, ஈபிபி நகரை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் முரளி லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின்படி, முரளி வரி வசூல் அலுவலரிடம் 15ஆயிரம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் வரி வசூல் அலுவலரை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவர்கள் இதில் தொடர்புடையவர்கள் குறித்து மண்டல அலுவலகர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கணக்கில் வராத 50 லட்சம் ரூபாய் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ABOUT THE AUTHOR

...view details