தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திம்பம் மலைப்பாதை இரவு போக்குவரத்து தடை விவகாரம் - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் - Minister A V Velu

திம்பம் மலைப்பாதையில் இரவு போக்குவரத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திம்பம் மலைப்பாதை இரவு போக்குவரத்து தடை விதிப்புக்கு அரசு சார்பில் எதுவும் செய்ய முடியாது - அமைச்சர் எ.வ.வேலு
திம்பம் மலைப்பாதை இரவு போக்குவரத்து தடை விதிப்புக்கு அரசு சார்பில் எதுவும் செய்ய முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

By

Published : Sep 30, 2022, 7:56 AM IST

ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் திம்பம் மலைப்பாதை 2, 6, 8, 9 மற்றும் 26ல் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாக புகார்கள் எழுந்து வந்தது.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அத்துறையின் தலைமை பொறியாளர் ஆகியோர் திம்பம் மலைப்பாதையில் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து நிகழும் 2, 6, 8, 9 மற்றும் 26 வது வளைவுகளில் விபத்து நடைபெறாமல் இருக்க சாலை விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தோம்.

அதிக பாரம் ஏற்றும் சரக்கு வாகனங்கள், திம்பம் மலைப்பாதையில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து சட்டமன்றத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு பதில் அளித்தோம். தடை விதிப்புக்கு அரசு சார்பில் எதுவும் செய்ய முடியாது. சட்டத்தை மதித்து நடப்போம்” என்றார்.

இதையும் படிங்க:திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details