ஈரோடு: ரயில் நிலையம் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து சென்று வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து ஈரோடு வழியாக அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சமீப காலமாக வடமாநிலங்களில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்படும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்குப் புகார்கள் வந்தன. அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் வெளி மாநில ரயில்களில் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளா செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு ரயில் நிலையத்தின் 2ஆவது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது ஈரோடு ரயில்வே போலீசார், ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்.5 பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர்.