தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதைக்காக இருமல் மருந்தை குடித்த வடமாநில இளைஞரிடம் விசாரணை! - ஈரோடு மாவட்ட செய்திகள்

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்குப் பயன்படுத்தும் மருந்தை போதைக்காக வாங்கி அருந்திய வடமாநில இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.

வடமாநில இளைஞர்
வடமாநில இளைஞர்

By

Published : Jun 4, 2021, 9:20 PM IST

ஈரோடு: மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்த குற்றத்திற்காக, மருந்தகம் ஒன்றுக்கு மாவட்ட அலுவலர்கள் சீல் வைத்தனர்.

ஊரடங்கு காரணமாக, அரசு மதுபான கடைகள் மூடப்பட்டன. போதைக்கு அடிமையான பல இளைஞர்கள், சட்டத்திற்குப் புறம்பான போதை வஸ்துகளை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வட மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் சாகு என்ற இளைஞர், அதிக போதையில் தள்ளாடியபடி சாலையில் சென்றதைக் கண்ட அப்பகுதி பொது மக்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த கோபி வட்டாட்சியர், காவல்துறை உதவி ஆய்வாளர் ஆகியோர் போதையில் இருந்த இளைஞரை பிடித்த விசாரித்தனர். விசாரணையில், கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள சில மருத்தகங்களில் இருந்து இருமல், சளி தொந்தரவுகளுக்காக விற்பனை செய்யப்படும் மருந்தை அதிக விலை கொடுத்து வாங்கி, போதைக்காக அருந்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவர் பரிந்துரையின்றி ஆபத்தான மருந்துகளை விற்பனை செய்ததாக, பொலவக்காளிபாளையம் பகுதியைச் சேர்த்த அப்புசாமி என்பவரின் மருந்தகத்துக்கு சீல் வைத்தனர். பின்னர் கோபி சரக மருந்துகள் ஆய்வாளர் நந்தகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோபி காவல்துறையினர் அப்புசாமி மீது வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிங்கத்தையும் சீண்டிப் பார்த்த கரோனா!

ABOUT THE AUTHOR

...view details