ஈரோடு சென்னிமலை சாலையில் செயல்பட்டுவரும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்குள் வட மாநில இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனைக் கண்ட அங்கு பணியில் இருந்த காவலாளி பிரகாஷ், அந்த இளைஞரை தடுத்துள்ளார். அப்போது வடமாநில இளைஞர் திடீரென பிரகாசை கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து அந்த இளைஞரை பிடித்து கட்டி வைத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், தமிழ்நாடு முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக பெரும்பாலான காவல் துறையினர் சென்றுவிட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு ஆய்வாளர் இளைஞரை மீட்க முயன்றார். அப்போது, காவல் துறையினரின் முன்னிலையிலேயே பொதுமக்கள் அந்த இளைஞரை தாக்கினர்.
வட மாநில இளைஞரை தாக்கும் பொதுமக்கள் இதனிடையே அவ்வழியாக வந்த மற்றொரு வடமாநில இளைஞரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், அவரையும் தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர், அவரை மீட்டு காவல் துறையினர் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: இரும்பு ஸ்கேலால் அடித்த அரசுப்பள்ளி ஆசிரியை: மாணவனுக்கு கண்ணில் பாதிப்பு!