தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது' - தமாகா வேட்பாளர் பேச்சு - தாமக வேட்பாளர்கள் பட்டியல்

ஈரோடு: அதிமுகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தை எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது என அதிமுக கூட்டணிக் கட்சியான தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜா கூறியுள்ளார்.

tmc candidate yuvaraja
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யுவராஜா

By

Published : Mar 15, 2021, 9:22 AM IST

Updated : Mar 15, 2021, 12:04 PM IST

ஈரோடு மாவட்ட கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜா, ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவை பின்வருமாறு:

அரசின் திட்டங்களையே மீண்டும் சொல்லும் திமுக அறிக்கை

"திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயலாகும். ஏற்கனவே பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது. அதையே மீண்டும் சொல்வது போல திமுகவின் அறிக்கை உள்ளது.

மக்களை ஏமாற்ற முடியாது. அதிமுக சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக உள்ளது. எனவே சிறுபான்மை வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும். பத்திரிகைகளும் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

கொங்கு மண்டலத்தை எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது என தமாகா வேட்பாளர் யுவராஜா பேச்சு

அதிமுகவின் கோட்டை கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. எந்தக் காலத்திலும் எப்போதும் அதை அசைக்க முடியாது. டாஸ்மாக் கடைகளை வரும் காலங்களில் படிப்படியாகதான் குறைக்க முடியும். 2006இல் திமுக ஆட்சி செய்த காலம் ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத் தொழில்களும் நசுங்கிய காலகட்டமாக இருந்தது" என்றார்.

இதையும் படிங்க: வெடிக்கும் உட்கட்சி பூசல் : என்ன நடக்கிறது காங்கிரஸில்?

Last Updated : Mar 15, 2021, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details