தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அணி வீரர்களை வரவேற்க ஆளில்லை! - மாற்றுத்திறனாளி வீரர்களை வரவேற்க ஆளில்லை

ஈரோடு: ஜெய்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு வீரர்கள் ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது அவர்களை வரவேற்க அரசு தரப்பிலிருந்தும் யாரும் வராதது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி  தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை வரவேற்க ஆளில்லாத அவலம்  ஈரோடு மாவட்டச் செய்திகள்  சிவகாரத்திகேயன் உதவிய கிரிக்கெட் அணி  erode district news  மாற்றுத்திறனாளி வீரர்களை வரவேற்க ஆளில்லை  மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அணி வீரர்களை வரவேற்க ஆளில்லை

By

Published : Dec 5, 2019, 10:32 PM IST

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் இறுதிப்போட்டியில் குஜராத் அணியுடன் தோல்வியடைந்த தமிழ்நாடு அணி இரண்டாம் இடம்பிடித்தது.

மேலாளர் ஹரி தலைமையில் சென்ற இந்த அணிக்கு தமிழ்நாடு அணியின் சேர்மன் ரமேஷ் கண்ணன், இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பல்வேறு உதவிகளைச் செய்துவந்தனர். போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு அணி வீரர்கள் இன்று ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தனர்.

கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அணி வீரர்களை வரவேற்க ஆளில்லை

ஆனால், அவர்களை வரவேற்க அரசுத் தரப்பில் யாரும் வரவில்லை. இதனால் வீரர்கள் மிகவும் மனவேதனை அடைந்தனர். தமிழ்நாடு அணிக்காக விளையாடி கோப்பை பெற்றுவந்த மாற்றுத்திறனாளி வீரர்களை வரவேற்கக் கூட தமிழ்நாடு அரசுக்கு மனதில்லையா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய மக்கள் வெற்றிபெற்ற வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறிச்சென்றனர்.

இதையும் படிங்க:'கை' போனால் என்ன? நம்பிக்'கை' இருக்கு ஜெயிக்க!

ABOUT THE AUTHOR

...view details