கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் சத்தியமங்கலம் பகுதியில் குளம் குட்டை நீரின்றி வறண்டு காணப்படுகிறது. கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக்குறியானது. குறைந்த தண்ணீரில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்த நிலையில் சத்தியமங்கலம் கிராமங்கள் ஒன்றுசேர்ந்து மழை பொழிய வேண்டி சத்தியமங்கலத்தில் வருண பகவான் கர்நாடக இசை கச்சேரி நடத்தினர்.
மழை வேண்டி இசை மழையில் நனைந்த மக்கள் ! - music concert
ஈரோடு : சத்தியமங்கலம் பகுதியில் மழை பெய்ய வேண்டி கர்நாடக சங்கீத வித்வான் நித்யஸ்ரீ மகாதேவனின் இசை கச்சேரி நடைபெற்றது.
மழைப்பொழிவு வேண்டி இசை மழையில் நனைந்த மக்கள்
இதில் கர்நாடக சங்கீத வித்வான் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் மனம் உருகிப் பாடினார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மழை வேண்டி நடந்த, இசைக்கச்சேரியில் கடைசி வரை மக்கள் எழுந்திருக்காமல் தொடர்ந்து மழை வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்தனர்.