தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி. ஆ.ராசா! - மக்களவைத் தேர்தல்

ஈரோடு: மக்களவைத் தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நீலகிரி தொகுதி திமுக எம்பி ஆ.ராசா நன்றி தெரிவித்தார்.

nilgiris-mp-raja

By

Published : Sep 19, 2019, 6:39 PM IST

2019 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய ஆ.ராசா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் இன்று சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம் மற்றும் சத்தியமங்கலம் நகர்ப்பகுதிகளில் தனக்கு வாக்கு செலுத்திய பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஆ.ராசாவிற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்பி

அப்போது பேசிய ஆ.ராசா, ”மக்களவைத் தேர்தலில் எனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீலகிரி மக்களவைத் தொகுதியில் பொதுமக்களின் வசதிக்காக மேட்டுப்பாளையம் மற்றும் உதகை ஆகிய இரண்டு இடங்களில் எம்.பி. அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்குள்ள எனது உதவியாளர்களிடம் மனுக்களை அளிக்கலாம். நீலகிரி தொகுதி மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க...

'உதயநிதி ஸ்டாலினால் மண்சட்டி சுமக்க முடியுமா?' - ஜான் பாண்டியன் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details