நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலூர் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மாயாற்றில் கலந்ததால் ஆற்றில் செந்நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயாற்றின் இருபுறமும் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் விவசாயிகள் ஆடு, மாடுகளை கரையோரம் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.
மாயாற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் பரிசல் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யவும் தெங்குமரஹாடா ஊராட்சி நிர்வாகத்துக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்துள்ளார்.