மக்களைத் தேர்தலையொட்டி பணம் கடத்தப்படுவதை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படையினர் பவானிசாகர் தொகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் சத்தியமங்கலம் - கோவை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அன்னூரில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு ஆடு வாங்குவதற்கு சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஆடு வியாபாரிகள் வெங்கட்ராமன், கோபால்சாமி, மனோன்மணி ஆகியோரிடம் இருந்து உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் ரூபாய் 4 லட்சத்து 76 ஆயிரத்தை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.