ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் பள்ளிக் கட்டடம், ஆய்வகத்திற்கு இன்று (செப்.,13) அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் இருவரும் இணைந்து பூமி பூஜையுடன் கட்டட பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதன் பின்னர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்து காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்குவதற்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.