தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தி புலிகள் காப்பகத்தின் செயலால் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்! - புலி

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இயற்கை அழகை ரசிக்க தங்கும் வசதியுடன் 'மாயா' சூழல் சுற்றுலா காப்பகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

File pic

By

Published : May 12, 2019, 11:06 AM IST

Updated : May 12, 2019, 11:49 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இயற்கை அழகை ரசித்து தங்கும் வசதியுடன் மாயா சூழல் சுற்றுலா காப்பகம் அறிமுகம் செய்துள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் அருண்லால் தெரிவித்தள்ளார்.

இது பற்றி அருண் லால் கூறியதாவது, 'வண்ணப்பூரணி சூழல் சுற்றுலா தற்போது 'மாயா' சூழல் சுற்றுலா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் முக்கியமாக விளங்கும் மோயாறு நதியை வைத்து மாயா சூழல் சுற்றுலா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் சபாரியுடன் மட்டுமின்றி தங்கும் வசதியும் சேர்த்து இன்பச் சுற்றுலாவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுலா திட்டத்தின் கீழ் தற்போது ஹாசனூர், ஜீரஹள்ளி, தலமலை, கடம்பூர், மாக்கம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள ஓய்வு விடுதிகளில் தங்கி புலிகள் காப்பகத்தினுள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் பார்வையாளர்கள் மாலை 5 மணிக்கு அவர்கள் முன்பதிவு செய்த தங்கும் விடுதிக்கு வந்தடைந்து, பின்னர் மாலை நேரம் புலிகள் காப்பகத்தில் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

பின்னர் வனம், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பார்வையாளர்களுக்கு காணொளி காட்சிகள் அல்லது உரையாடலுக்கு பின் இரவு உணவு அளிக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்படுவார்கள்.

காலை தேநீருக்குப் பின்னர் பறவைகள், பட்டாம்பூச்சிகளை காணும் வகையில் இயற்கையோடு ஒன்றி இயற்கையை ரசிக்க வசதியாக புலிகள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தங்குமிடத்தில் காலை உணவுக்கு பின்னர் பார்வையாளர்கள் வழி அனுப்பப்படுவார்கள்' என்று அவர் தெரிவித்தார்.

சத்தி புலிகள் காப்பகம்


மாயா சூழல் சுற்றுலா காப்பகத்தில் தங்குவதற்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணையதளமானhttps:\\str-tn.org வாயிலாக முன்பதிவு செய்யலாம் அல்லது +91 7397 502 528என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Last Updated : May 12, 2019, 11:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details