ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து அத்தாணி செல்லும் சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதி மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால் எதிரே வரும் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
விபத்துகளைத் தடுக்க சூரிய ஒளியில் ஒளிரும் விளக்குகள்! - விளக்குகள்
ஈரோடு: விபத்துகளைத் தடுக்க சாலை சந்திப்புகளில் சூரிய ஒளி சக்தி மூலம் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சத்தியமங்கலம் அத்தாணி சாலை எம்ஜிஆர்நகர் சந்திப்பில் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல உதவுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள், ‘24 மணிநேரமும் ஒளிரும் விளக்குகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க உதவுகிறது. இந்த ஒளிரும் விளக்குகள் ஓரிரு இடங்களில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் உள்ள சந்திப்புகளிலும் இது போன்ற ஒளிரும் விளக்குகள் வைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி போன்ற இடங்களிலும் இதனை விரிவுபடுத்த வேண்டும்’ என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.