தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயம் - ஈரோடு டெம்போ சரக்கு வாகனம் விபத்து

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே டெம்போ சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் நான்கு பெண்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

near gobichettipalayam 12 injured in a tempo accident
சரக்கு வாகனம்

By

Published : Dec 14, 2019, 8:07 PM IST

ஈரோடு மாவட்டம் பாரியூர் பகுதியில் கோபிசெட்டிபாளையத்திலிருந்து அந்தியூரை நோக்கி சென்ற டெம்போ சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தில் பயணம் செய்த நான்கு பெண்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் தகவல் தெரிவித்ததில் சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்களுக்கு அனுப்பிவைத்தனர். பின் விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்பட்டது.

தொடர்ந்து விபத்துக் குறித்து மேற்கொண்ட விசாரணையில், அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் உயிரிழந்த உறவினரின் இறுதிச்சடங்கிற்கு தவிட்டுப்பாளையத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் மின் மயானத்திற்கு அந்த 12 நபர்கள் டெம்போ சரக்கு வாகனத்தில் வந்துள்ளனர். இறுதிச்சடங்கு முடிந்து திரும்பி அந்தியூர் செல்லும் வழியில் வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் விபத்து ஏற்பட்ட பின் ஓட்டுநர் தப்பியோடியதாகவும் தெரியவந்தது.

சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயம்

இதையும் படியுங்க: பள்ளி வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து: 8 மாணவர்கள் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details