தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 14, 2022, 3:24 PM IST

ETV Bharat / state

தொடர்ச்சியாக ஆடு, கோழிகளை வேட்டையாடும் அடையாளம் தெரியாத விலங்கு

கொடுமுடி அருகே அடையாளம் தெரியாத விலங்கு நடத்தும் வேட்டையால் தினந்தோறும் ஆடு, கோழிகள் செத்து மடிவதால் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி விலங்கை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆடு, கோழிகளை வேட்டையாடும் மர்ம விலங்கு
ஆடு, கோழிகளை வேட்டையாடும் மர்ம விலங்கு

ஈரோடு:கொடுமுடி பகுதியில் அடையாளம் தெரியாத விலங்குடைய நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் வளர்த்து வரும் ஆடு,கோழிகள் பலியாகி வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு கொடுமுடி அருகே கல்வெட்டுபாளையத்தைச் சேர்ந்த விவசாயி தனது தோட்டத்தில் வளர்த்து வந்த 11 ஆடு, 3 கோழியை இரவில் அடையாளம் தெரியாத விலங்கு கடித்துக்கொன்றது. இந்நிலையில் வெங்கம்பூர் கம்மங்காட்டுகளம் பகுதியைச் சேர்ந்தவர் மரகதம் (55) வீட்டின் அருகில் சுமார் 15 ஆடுகள், 2 மாடுகள், 10க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்த்து வருகிறார். இரண்டு பெரிய ஆடுகள் தவிர சிறிய ஆடுகள் அனைத்தையும் மற்றொரு கம்பி வேலி போட்டுள்ள கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தார்.

நேற்று இரவு சுமார் இண்டரை மணி அளவில் கோழிகள் அலறும் சத்தம் கேட்டு உள்ளது. உடனே மரகதம் மற்றும் அவரது உறவினர் கௌரிபிரசாத் வெளியில் சென்று பார்த்தபோது சுமார் இரண்டடி உயரத்தில் கறுப்பு நிறத்தில் அடையாளம் தெரியாத விலங்கு வேகமாக ஓடியுள்ளது.

உடனே அருகில் பட்டி வைத்து இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு ஆடு, கோழியை பத்திரமாக பாதுகாப்பாக வைத்த பட்டியின் உள்ளே சென்று பார்த்துள்ளார்கள். அப்போது ஒரு ஆடு இறந்து கிடந்துள்ளது. ஓடிய அடையாளம் தெரியாத விலங்கு அருகில் இருந்த இரண்டு கோழிகளைக் கடித்து கொன்றுவிட்டு ஓடிவிட்டது.

காலையில் இதுகுறித்து தகவல் அறிந்து கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு உடற் கூராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டனர். வனத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும், தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் இந்த நிலை தொடர்ந்து நடைபெறாமல் இருக்க வனத்துறையினர் சி.சி.டி.வி கேமரா பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

தொடர்ச்சியாக ஆடு, கோழிகளை வேட்டையாடும் அடையாளம் தெரியாத விலங்கு

இதையும் படிங்க: ஜகா வாங்குவதே ரஜினிக்கு வழக்கம்... ஈவிகேஎஸ் இளங்கோவன்

ABOUT THE AUTHOR

...view details