தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நோன்பு கஞ்சிக்கான அரிசியை நிவாரணத்திற்காக வழங்குகிறோம்' - ஈரோட்டில் ‘நோன்புக்கஞ்சிகான அரிசியை நிவாரணத்திற்காக வழங்குகிறோம்’ - இஸ்லாமிய ஜமாத் தலைவர்கள்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நோன்பு கஞ்சி வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை கரோனா நிவாரணத்திற்கு வழங்குவதாக ஜமாத் தலைவர்கள் தெரிவித்தனர்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம்
கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம்

By

Published : Apr 24, 2020, 6:52 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை தெரியும் மூன்றாம் பிறையைத் தொடர்ந்து ரமலான் மாதத்தை எவ்வாறு கொண்டாடுவது, நோன்பு கஞ்சியை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமிய ஜமாத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ரமலான் நோன்பு குறித்தும் தொழுகைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதில் கூட்டுத் தொழுகைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும்; நோன்பு கஞ்சி வழங்கக்கூடாது என்றும் கோட்டாட்சியர் எடுத்துரைத்தார்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம்

இதையடுத்து இக்கூட்டத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட ஜமாத் தலைவர்கள் நோன்பு கஞ்சி பச்சரிசியை கரோனா நிவாரணத்திற்கு வழங்குவதாக அறிவித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம், வருவாய் கோட்டத்திற்குட்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், தாசில்தார்கள், காவல் ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அமைச்சர் நிவாரணம் வழங்கிய இடத்தில் மக்களிடையே தள்ளுமுள்ளு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details