தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் முகிலன் உள்ளிருப்பு போராட்டம்! - Mughal protest at Erode District Collector Office

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வேண்டி அளித்த மனுவை வாங்க மறுத்த அலுவலர்களை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் முகிலன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட முகிலன்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட முகிலன்

By

Published : Dec 2, 2021, 10:48 PM IST

ஈரோடுமாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவலைப் பெறுவதற்காக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தின் 7ஆவது மாடியில் இயங்கும் புவியியல் மற்றும் சுரங்கவியல் அலுவலகத்திற்கு இன்று வந்து அங்கிருந்த அலுவலர்களிடம் மனு அளித்தார்.

ஆனால், மனுவை வாங்க மறுத்த அலுவலர்கள் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து அவரை அலைக்கழித்தனர். இதனால், அதிருப்தி அடைந்த சமூக ஆர்வலர் முகிலன், ஈரோடு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கவியல் துறை அலுவலர்களின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட முகிலன்

இதனையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும், அரசு அலுவலர்களும் அவரது மனுவைப் பெற்றதையடுத்து முகிலன் உள்ளிருப்பு போராட்டத்தைக் கைவிட்டார்.

இதையும் படிங்க:அதிகரித்து வரும் ஒமைக்ரான்: நம் மன நலனை பேணிக் காக்க சில எளிய வழிகள்!

ABOUT THE AUTHOR

...view details