தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்கள் திட்டத்தை எதிர்த்தால் முறியடித்து நிறைவேற்றுவோம்' - ஆ.ராசா - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்

ஈரோடு: மக்கள் திட்டங்களை எதிர்த்தால் அதனை முறியடித்து நிறைவேற்றுவோம் என நீலகிரி எம்பி ஆ.ராசா தெரிவித்தார்.

a.rasa
a.rasa

By

Published : Nov 27, 2020, 9:53 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கோணமூலை ஊராட்சியில் 17 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (நவம்பர் 27) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட நீலகிரி எம்பி ஆ.ராசா திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

பூமி பூஜையின் போது யூனியன் சேர்மன் இளங்கோ, அலுவலர்கள் தார்சாலை அமைக்க இடையூறு செய்தனர், அதனை மீறியே இந்த வேலை தொடங்கப்பட்டதாக ஆ.ராசாவிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ராசா, "மக்கள் திட்டங்களை எதிர்த்தாலும் அதனை முறியடித்து நிறைவேற்றுவோம். திமுக ஆட்சி வரும்போது இதைவிட சிறப்பாக பணிகள் செய்வோம்" என்றார்.

மக்கள் திட்டத்தை எதிர்த்தால் முறியடித்து நிறைவேற்றுவோம்

இதையும் படிங்க:அனைத்துத் துறையிலும் இடஒதுக்கீடு என்ற இலக்கை அடைய சபதம் ஏற்போம் !

ABOUT THE AUTHOR

...view details