ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு கடம்பூர் சென்று வருகின்றனர். அப்படி செல்லும்போது குரும்பூர், அருகியம் ஆகிய இடங்களில் காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் சில தினங்களாக பெய்த கனமழையால் குரும்பூர் மற்றும் அருகியம் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆபத்தை உணராமல் காட்டாற்றை கடந்து செல்லும் மலைகிராம மக்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஆபத்தை உணராமல் மலைகிராம மக்கள் காட்டாற்றை கடந்து சென்று வருகின்றனர்.
இதனால் வாகனங்களோ, மக்களோ ஆறுகளை கடந்து செல்ல வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு செல்லும் அரசு பேருந்து சேவையும் 3 நாள்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மாக்கம்பாளையம் மக்கள் ஆபத்தை உணராமல் காட்டாறுகளை கடந்து சென்று வருகின்றனர். அந்த கிராம மக்களுக்கு அத்தியாவசிப்பொருள்கள் வாங்க வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உரிமையாளர் கண்முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்