ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் எடப்பாடி அருகே உள்ள தேவூரை சேர்ந்த ருக்மணி(55) மற்றும் அவரது மகன் சின்னுச்சாமி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்றுள்ளனர்.
அப்போது பவானி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பச்சபாலி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் அவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியதில் ருக்குமணி அம்மாள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த இரும்பு சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகன் சின்னுச்சாமி அங்கிருந்த 100-அடி பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சித்தோடு காவல் துறையினர் சின்னுச்சாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய்,மகன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக சித்தோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலத்தை உடைத்து பறந்த கார், ஒருவர் மரணம் - வீடியோ