தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூறாவளிக் காற்றால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்! - ஈரோடு அண்மைச் செய்திகள்

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சேதமடைந்த வாழை மரங்கள்
சேதமடைந்த வாழை மரங்கள்

By

Published : Mar 26, 2021, 4:22 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, கொத்தமங்கலம், ராஜன்நகர், புதுவடவள்ளி, சிக்கரசம்பாளையம், காந்திநகர், பட்டரமங்கலம், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உழவர்கள் அதிகளவில் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு கதலி, நேந்திரன், செவ்வாழை, தேன் வாழை உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகள் உழவர்களால் பயிரிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்தப் பகுதியில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் முப்பதுக்கும் மேற்பட்ட உழவர்களின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் பத்தாயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

இதனால் இப்பகுதி உழவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். திடீர் இயற்கைச் சீற்றத்தால் உழவர்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை, அரசு கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ராமர் கோயில் கட்ட ஜம்மு காஷ்மீரிலிருந்து 17 கோடி ரூபாய் நிதி

ABOUT THE AUTHOR

...view details